உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் – உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
