பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக

download-7-9.jpeg

நேற்று 11 இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அம்பாந்தோட்டை ரன்னவிலவில் உள்ள படாத்த பண்ணைக்கு அருகில்  விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.​

குறித்த விபத்தானது நேற்று 11 இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டை பொலிஸில் இணைக்கப்பட்ட 54 வயதான பொலிஸ் அதிகாரி அன்ட்ரஹென்னடிகே மஞ்சுள பிரியநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அம்பாந்தோட்டை நோனகம பகுதியைச் சேர்ந்தவர்.குறித்த பொலிஸ் அதிகாரி தனது மோட்டார் சைக்கிளில் ரன்னவிலிருந்து ஹங்கம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஹங்கமவிலிருந்து ரன்ன நோக்கிச் சென்ற ஒரு கெப் ரக வாகனத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் சாரதி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தபொலிஸ் அதிகாரியின் உடல் ரன்னா கிராமப்புற மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கெப் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்து குறித்து ஹங்கமபோக்குவரத்து பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *