நக்சலைட்டுகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.என்கவுன்டர்சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.என்கவுன்டர் குறித்து நக்சல் தடுப்பு நடவடிக்கை பஸ்டர் சரக ஐ.ஜி., சுந்தர்ராஜ் கூறியதாவது:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான இந்திராவதி தேசிய பூங்கா பகுதிகளில் இன்று காலை பாதுகாப்பு படையினருடன் இணைந்து நக்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எங்களுடன் மாவட்ட ரிசர்வ் கார்டு, சிறப்பு இலக்கு படை மற்றும் மாவட்ட பாதுகாப்பு படையினரும் இருந்தனர். நாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சல்கள் வைத்திருந்த தானியங்கி வெடிகுண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
கடந்த ஜன.9 ம் தேதி சுக்மா மாவட்டத்தில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவ்வாறு அவர் கூறினார்.இன்றைய தாக்குதல் சம்பவத்தில் முதலில் நக்சல்கள் 3 பேர் உடல்கள் மட்டுமே கிடைத்தன. தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளில் நடந்த தேடுதலில், மேலும் 2 பேரின் உடல்களும், ஏராளமான ஆயுதங்களும் கிடைத்துள்ளதாக, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
