தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக , நீண்ட காலமாகவும் , சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்து , வடக்கு கிழக்கு தழுவிய கையெழுத்து போராட்டம்
வடக்கு கிழக்கை மையமாக கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்து , கையெழுத்து போராட்டம் சனிக்கிழமை ( 11.01.2025 ) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் இடம்பெற்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக , நீண்ட காலமாகவும் , சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்து , வடக்கு கிழக்கு தழுவிய கையெழுத்தினை சேகரித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடமும் சட்டமா அதிபரிடமும் கையளிப்பதற்காக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் இதற்கான மகஜரை கையளிக்கவுள்ளனர்.
இவ் கையெழுத்து வேட்டையின் நோக்கம் எதிர்வரும் சுதந்திர தினத்திற்குள் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
