150 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து. வெற்றியை பதிவுசெய்தது இலங்கை அணி.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றது நியூசிலாந்து.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்ற நிலையில், நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை அணி.
150 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து..
சாம்பியன்ஸ் டிரோபிக்கு முன்னதாக அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் அணிகள் முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையே வலுவான போட்டியாக 3வது ஒருநாள் போட்டி அமைந்தது.
