மாணிக்கவாசகப் பெருமான் அருள்

473117956_923944723216563_5333695971885603128_n.jpg

மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமசுவாமி ஆலயத்தில் பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினரால் மாணிக்கவாசகப் பெருமான் அருள் செய்த திருவாசக முற்றோதல் நிகழ்வு இன்று 11. இடம்பெற்றது.

இன்று காலை ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமிக்கு விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ,வசந்த மண்டபத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மாணிக்கவாசகர் சுவாமிகளின் திருவுருவத்திற்கு ஆராதனை வழிபாடு இடம்பெற்றது. இதனைத்தொடரந்து மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகதிருப்பதிகம் அடியார்களால் ஓதப்பட்டது.

மார்கழி மாதத்தின் சிறப்பு வாய்ந்த விரதங்களுள் ஒன்றாக காணப்படும் திருவெம்பாவை விரதத்தின் , ஆருத்ரா தரிசனம் எனப்படும், திருவாதிரை தீர்த்த உற்சவத்திற்கு முதல் திருவெம்பாவை காலத்தில் திருவாசகமுற்றோதல் ஓதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வுகள் யாவும் மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலயப்பரிபால சபையினரின் ஏற்பாட்டில் ஆலய பிரதம குரு சிவகரன் குருவினால் ஆலய கிரியை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *