அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர்.
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவர் அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர்.
சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவர் தேர்வாகும் வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார். தற்போது அடுத்தக்கட்டமாக பிரதமர் ரேசில் இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
அந்த வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரா ஆர்யா களம் இறங்குகிறார். இன்னொருவரான அனிதா ஆனந்தும் பதவிக்கு மோதுகிறார். தமிழக தந்தை – பஞ்சாப் தாயாருக்கு பிறந்த அனிதா ஆனந்த், தாமும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர்.
வெளிநாடுகளில் புகழ் பெற்ற, இந்திய வம்சாவளியினர், ரிஷி சுனக் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு, அடுத்த இடத்தில், 57 வயதான அனிதா இந்திரா உள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய உடனேயே, இந்திய ஊடகங்களின் கவனம் அனிதா இந்திரா பக்கம் திரும்பியது. இவரது வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், நாளிதழ்கள் உட்பட அனைத்திலும் சிறப்பு செய்திகள் வந்த வண்ணம் இருந்து கொண்டு இருக்கிறது.
