இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து

download-6-8.jpeg

46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (08) மாலை நடைபெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைக்கலப்பாக மாறிய மனகசப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் வசிக்கும் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியுள்ளது. இதனால் கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார்.

அது பலனளிக்காத நிலையில் காட்டுக்குள் சென்று இரு இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவருக்கு சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அக்காவின் கணவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் அக்காண் கணவ்ன் மீது துப்பாக்கிசூடு நடாத்திய 24 வயதுடைய சந்தேகநபர் சுட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *