ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை

download-30.jpeg

ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை 1500 ரூபா அபராதம்

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக 1500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 16, 2016 அன்று, கிருலப்பனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை துடைத்தெறிய வேண்டும்” என்று கூறினார். ஞானசார தேரர் அறிவித்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றவியல் சட்டத்தின் 291ஆவது பிரிவின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *