மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே

download-2-10.jpeg

7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. இந்த சீசனில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை டிச. 30 மாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றுமுதல் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. டிச. 30 முதல் ஜன., 6 அதிகாலை 12:00 மணி வரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஜன. 6 ல் மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 12 பேர் தரிசனம் செய்தனர். இது ஜன.5- ல் 90 ஆயிரத்து 678 ஆக இருந்தது.

நடை திறந்த நாள் முதல் பக்தர்களின் நீண்ட கியூ எப்போதும் மர கூட்டம் வரை காணப்படுகிறது. இதனால் 7 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். எருமேலி , புல்மேடு பாதைகளில் வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. புல் மேடு பாதையில் சத்திரத்திலிருந்து காலை 6:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், எரிமேலியிலிருந்து பெருவழிப் பாதையில் முக்குழியில் இருந்து மாலை 4:00 மணி வரையிலும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

சன்னிதானம், வாவர்நடை முன்புறம் உள்ள மைதானம், மாளிகைப்புறம் கோயில் அருகில் உள்ள மைதானங்களில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் நிறைந்துள்ளது. அப்பம் ,அரவணை கவுன்டர்களிலும் 24மணி நேரமும் நீண்ட கியூ காணப்படுகிறது.

பம்பையில் ‘ஸ்பாட் புக்கிங்’குக்காக ஏழு கவுன்டர்கள் செயல்படுகிறது. இங்கு பக்தர்களின் நீண்ட கியூ திருவேணி சங்கமம் வரை உள்ளது .பாஸ் வழங்குவது தாமதமாவதாகவும், இதனால் சிரமப்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்


இதற்கிடையில் புல் மேடு பாதையில் நடுவழியில் சிக்கிய தமிழக பக்தர்கள் நான்கு பேரை போலீசார் மற்றும் தேவசம்போர்டு ஸ்டிரெச்சர் சர்வீஸ் ஊழியர்கள் மீட்டு வந்தனர். சென்னையை சேர்ந்த லீலாவதி, ஆண்டனி, பெரியசாமி, மதுரையைச் சேர்ந்த லிங்கம் ஆகிய நான்கு பேர் உடல்நலக்குறைவு காரணமாக உரக்குழியில் இருந்து மூன்று கி. மீ. துாரத்தில் தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர். இது குறித்து வனத்துறை அளித்த தகவலில் நான்கு பேரும் மீட்கப்பட்டு சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *