சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை வைரஸ் தொற்று புதியது அல்ல என்றும் 2001ஆம் ஆண்டிலிருந்தே இதன் பாதிப்பு இருந்து வருவதாகவும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உரிய சிகிச்சை மூலம் நோயை சரி செய்யலாம் என்றும் இது குறித்து அச்சம் தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இத்தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தொற்று பரவல் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேவைப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது
