விசேட வாகனச் சோதனை நடவடிக்கை க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் பேருந்து சோதனை நடவடிக்கை காரணமாக தங்களது தொழில்துறை தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக கூறும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் காவல்துறைமா அதிபரை சந்தித்து தீர்வு காண தீர்மானித்துள்ளனர்.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து இலங்கை காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட வாகனச் சோதனை நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், சிவில் உடையில் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு, பயணிகள் பேருந்துகளை ஆய்வு செய்வதுடன், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளை எச்சரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
