சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

download-15-2.jpeg

கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம்

எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழிப் புலமைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடம் இருந்து கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்புபவர்கள் காரணமாகப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாட்டிற்கு வேலை தேடும் இலங்கையர்கள் எவ்வித சிரமமும் இன்றி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டை கோரியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல விரும்பும் இலங்கையர்களின் கடவுச்சீட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த நாட்டில் கிடைக்கும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் வேறு நாடுகளின் தொழில் சந்தைக்கு மாற்றப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்த போதிலும், இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிப்பதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க, கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சினை அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் எழுப்பப்பட்டதை உறுதிப்படுத்தினார

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *