இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, 6 பேர் எம்.பி.,க்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுடன், பார்லிமென்ட் பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினர் ஆறு பேர் வெற்றி பெற்றனர். அதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை படைத்தார். இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக பணியாற்றியவர்.
இவருடன், ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களான ஸ்ரீ தனேதர் – மிச்சிகனிலும், ராஜா கிருஷ்ணமூர்த்தி – இலினாய்ஸ், ரோ கன்னா – கலிபோர்னியா; அமி பெரா, கலிபோர்னியா; பிரமிளா ஜெயபால் – வாஷிங்டனிலும் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளனர்.
அரிசோனா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமிஷ் ஷா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அமெரிக்கா பார்லிமன்ட் முறைப்படி செயல்பட துவங்கிய நிலையில், இவர்கள் 6 பேரும் எம்.பி.,க்களாக பதவியேற்று கொண்டனர். எம்,பி.,க்களாக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த, 6 பேருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
