தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டம் துரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு நாளை ஜன.6 முன்பதிவு தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.
அவனியாபுரத்தில் வரும்(ஜன) 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த 3 போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், காளைகள் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். madurai.nic.in என்ற இணையதளம் மூலம் நாளை(ஜன.6) மாலை 5 மணி முதல் ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். 3 இடங்களில் ஜல்லிக்கட்டுகள் நடக்கிறது என்ற போதிலும், அதில் ஏதேனும் ஒரு இடத்தில் மட்டுமே காளைகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் உரிய முறையில் சரி பார்க்கப்பட்ட பின்னர், தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
