விண்கல் மழை: விண்வெளியில் வால் நட்சத்திரம்
இன்று இரவு வானில் விண்கல் மழை பொழிய உள்ளது. இதனை பார்ப்பதற்கு சரியான இடம் வேலூர்தான். எனவே சென்னை மக்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் கண்டு ரசியுங்கள்
விண்கல் மழை: விண்வெளியில் வால் நட்சத்திரம் என்கிற அற்புதமான ஒன்று இருக்கிறது. இது சூரியனை சுற்றி வருகிறது. இந்த பயணித்தின்போது போகும் வழியெல்லாம் தன்னுடைய வாலில் இருந்து சிறிய விண்கற்களையும், தூசி துகள்களையும் விட்டு செல்கிறது. இப்படி விட்டு செல்லப்பட்ட விண்கற்களின் பக்கத்தில் பூமி வரும்போது, அந்த கற்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. இந்த கற்கள் ரொம்ப சிறியது. எனவே வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனுடன் உரசி தீப்பற்றி எரிந்துவிடுகிறது.
பூமியிலிருந்து இந்த நிகழ்வை பார்ப்பதற்கு விண்கல் மழை போல இருக்கும். அற்புதமான இந்த நிகழ்வு இன்று இரவும், நாளை இரவும் நடக்கிறது. இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. வரப்பிரசாதம் வேலூர்: குவாட்ரான்டிட் விண்கல் மழை என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு டிசம்பர் 17ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை நடக்கிறது. ஆனால் இன்றும் நாளையும் மட்டும்தான் அதிகமான விண்கற்கள் பூமி மீது விழும். எனவே, இந்த விண்கல் மழையை கண்டு ரசிக்க ஏற்ற நாள் இதுதான். அதேபோல சென்னையிலிருந்து இதனை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம். ஏனெனில் இங்கு ஒளி மாசு அதிகம். எனவே விண்கல் பொழிவு சரியாக தெரியாது. இதற்கு ஏற்ற இடம் வேலூர்தான்.
அதாவது வேலூர் மாவட்டத்தில் உள்ள வைணு பாப்பு விண் ஆய்வகம் பகுதியில் ஒளி மாசு குறைவு. இந்த ஆய்வகம் திருப்பத்தூரில் அமைந்திருக்கிறது. நீங்கள் ஆய்வகத்திற்கு சென்று, அங்குள்ள தொலை நோக்கி மூலம் இதை பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆய்வகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சென்று சும்மா வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே போதும். விண்கல் மழை தெளிவாக தெரியும்
