தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க உத்தரவு.
தை 1ம் தேதி பொங்கல் விழா வரும் 14ம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக தற்போதிலிருந்தே புத்தாடைகள் வாங்குவது உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் ஆர்வமாக கடைகளில் குவிந்து வருகின்றனர்.
பொங்கலுக்காக தமிழ்நாடு அரசு வழக்கமாக நியாய விலைக் கடைகளில், பொங்கல் தொகுப்பு வழங்கும். அதனுடன் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட 1000 ரூபாயும் வழங்கும்.
இந்த முறை ‘ஃபெஞ்ச்’ புயல் நிவாரணம், மகளிர் உரிமைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட காரணங்களாலும், நிதி பற்றாக்குறை காரணமாகவும் பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்கவில்லை.
