சோதனை செய்த வருமானவரித்துறையினர், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வேலூரில் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில், திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரது வீட்டில் சோதனை செய்த வருமானவரித்துறையினர், கணக்கில் வராத 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், வேலூரில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும், காட்பாடி அடுத்த சித்தூர் சாலையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று, திமுக பிரமுகரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளருமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பள்ளிக்குப்பம் நடு மோட்டூரில் உள்ள அவரது 2 வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 6 அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
