இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், வட கோவை மேம்பாலத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கொச்சியிலிருந்து எரிவாயு ஏற்றி சென்ற சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட டேங்கர் லாரி கவிழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
டேங்கர் லாரியிலிருந்து எரிவாயு கசிந்து வரும் நிலையில், லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியை தீயணைப்பு துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். லாரி மேம்பாலத்தின் மீது கவிழ்ந்திருப்பதால், மின்சார ஒயர்கள் எதுவும் இல்லை என்பதால் கிரேன் வைத்து அதனை மீட்கும் பணி நடந்துவருகிறது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் நிலை குறித்து தீயணைப்பு துறை மற்றும் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், லாரியின் ஒரு இடத்தில் மட்டுமே கசிவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் எரிவாயு கசிந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், ராசாயன மூலப்பொருட்களை கொண்டு கசிவை தடுக்கும் பணி நடைபெறும் நிலையில் ஓரளவு கசிவு தடுக்கப்பட்டுள்ளது.
4 மணி நேரத்திற்கு மேலாக பணிகள் நடைபெற்று வரும்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 கி.மீ அளவில் உள்ள பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
