சென்னை ECR-ல் அமையும் கலைஞர் பன்னாட்டு அரங்கம். எவ்வளவு கோடியில் கட்டப்படுகிறது தெரியுமா ரூ. 175 கோடி முதலீட்டில் கட்டுமான பணியை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
சென்னை ECR-ல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2023ம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய “கலைஞர் நூலகம்” ஒன்றை அமைத்தார். அதேபோல், சமீபத்தில் திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கு ரூ. 175 கோடி முதலீட்டில் கட்டுமான பணியை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. அந்த வகையில், தற்போது மீண்டும் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சென்னை ECR முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்” அமைப்பதற்காக கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம், பொதுப்பணித்துறை அனுமதி கோரியுள்ளது. மேலும், இந்த கட்டுமான பணி 2025ம் ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
