9.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் வங்கிக் கணக்கில்

download-37.jpeg

விவசாயிகளுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானிய வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை 9.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் யூ. பி. ரோஹண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 6,25,132 விவசாயிகளுக்கு இந்த மானியம் உரித்தாகும் என்றும் 497,325 ஹெக்டயார் நெல் உற்பத்திக்காக உரமானியமாக அரசாங்கம் 20 பில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்த மானியத் திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டமே அதிக பயன்பெறுவதாகவும் அந்த மாவட்டத்திற்கு 172 .39 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக அதிக பயன்பெறும் மாவட்டமாக அனுராதபுரம் மாவட்டம் விளங்குவதுடன் அந்த மாவட்டத்திற்கு 124.42 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 118. 34 கோடி ரூபாவும் பொலனறுவை மாவட்டத்திற்கு 91. 16 கோடி ரூபாவும் திருகோணமலை மாவட்டத்திற்கு 83.34 கோடி ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உர மானியத்தை 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதன் முதற்கட்டமாக 15,000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *