பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இதுகுறித்து விரைவில் நல்ல செய்தி வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு இந்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.
பொங்கல் பண்டிகை வரும் ஜன. 14ஆம் தேதி (Pongal 2025) கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான இந்த பண்டிகைக்கு ரேசன் கடைகள் மூலம் தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.இருப்பினும், கடந்தாண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரொக்கம் ஏதும் முதற்கட்டமாக அறிவிக்கப்படாததால் மக்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.�
