சீனாவுடன் தைவான் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜிஜிங்பிங் புத்தாண்டு செய்தியாக சீன மக்களுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தீவான தைவான் நாட்டை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் தைவான் தனி நாடு அல்ல; அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா சொல்லி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்ப தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் திடீரென தைவான் தீவை சுற்றிலும் கடல் பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகையை துவங்கியதுடன், விமானப்படை மற்றும் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் புத்தாண்டையொட்டி சீன அதிபர் ஜிஜிங்பிங் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், தைவானில் உள்ள மக்களும் சீன மக்களும் ஒரே குடும்பம். எங்கள் இரத்த உறவுகளை யாராலும் துண்டிக்க முடியாது, எனவே தாய்நாட்டுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைப்பதற்கான வரலாற்றுப் போக்கை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
