ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான

download-5-6.jpeg

ஜனாதிபதி விளாடிமிர் புடின் அண்மையில் தெரிவித்திருந்தார்

உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்கு தங்கள் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில்,

புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA- அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *