ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

download-7-6.jpeg

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் முறையான திட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும்

என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்திற்கு வந்து சில முக்கிய அறிவிப்புக்களை அறிவித்தார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2028 ஆம் ஆண்டு தமது அரசாங்கமே அமையும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, நேற்றிரவு (17) நாடு திரும்பிய சில மணித்தியாலங்களின் பின்னர், அவர் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *