இன மத மொழி கடந்து மக்களுக்கான அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்
தமிழர் சமூக அபிவிருத்தி அமைய செயலர் எஸ். ரி. பிரணவன் தெரிவிப்பு.
வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் துயர் நிலை அறிந்து அவர்களுக்கான அனைத்து கல்வி மற்றும் வாழ்வாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை நாங்கள் இனம் கண்டு அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் முன்னெடுத்து கலை கலாச்சார விழுமிய கோட்பாடு ஊடாக அவர்களுக்கு தேவையான அனைத்து செயல்பாடுகளையும் எதிர்காலத்தில் முன்னேடுப்போம். அத்தோடு பெண் தலைமை குடும்பங்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அனைவரின் நிலையிலும் நாங்கள் ஒரு செயற்குழு தீர்மானம் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை
எதிர்காலத்தில் ஒரு வினைத்திறன் கொண்டதாக மாற்றி செழுமையான ஒரு மாற்றத்தை நாட்டில் உருவாக்குவோம் ஆகவே எங்களுடைய தமிழர் சமூக அபிவிருத்தி அமையம் இலங்கை மற்றும் சர்வதேசதில் இன மத மொழிகளுக்கு அப்பால் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவே எங்களுடைய பணிகளை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம் அதே போலவே இலங்கை நாட்டிலும் நாங்கள் இனங்களுக்கு இடையிலனா நெருங்கிய நல்லிணக்கம் கொண்ட செய்ற்படுகளையும் முன்னெடுத்து அந்த
செயற்பாடுகள் மூலம் சரியான ஒரு சமூகத்தை அனைத்து விடயங்களிலும் முன்னிலை படுத்தி எதிர்காலதில் ஒரு வினைத்திறன் கொண்ட ஒரு சமூக நிலைப்பாட்டை உருவாக்கி நாங்கள் அனைவரும் ஒற்றுமை கொண்ட ஒரு இனமாக வாழ நிச்சயம் நாங்கள் ஒத்துழைப்பு வளங்குவோம். எனவே எங்கள் நிறுவனம் அரசியல் போக்குகளை தாண்டி கல்வி அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார நிலைகளை எங்கள் மக்களுக்கு சரியாக வழங்கும் ஒரு நிறுவனமாக செயல்படும் என்பதை நான் நிதர்சனமாக கூறுகின்றேன். எனவே நாங்கள் ஒரு சரியான வலுவான
நிர்வாக உறுப்பினர்களை கொண்ட ஒரு நிறுவனம் அதற்கு ஏற்றவாறு நாங்கள் சரியான திட்டமிடல் மற்றும் ஒழுக்கம் நநேர்மை தன்மை ஊடாக சரியான நிவர்த்தி கொண்ட செய்ற்பாடுகளை முன்னெடுத்து செல்வோம் என்பதை சமூகதிற்கு எடுத்து கூறுகின்றேன்.
எனவே வருங்காலம் ஒரு மாற்றம் நோக்கியதாக அமைய வேண்டும் என்பதே வலுவான திட்டம் என்பதை எங்கள் செயல் திட்டம் ஊடாக நான் உறுதியாக இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
