உக்ரைனுக்கு ரூ 8365 கோடி அளவுக்கான புதிய ஆயுத

download.jpeg

உக்ரைனுக்கு உதவும் பொருட்டு 62 பில்லியன் டொலர் நிதியை அமெரிக்கா ஒதுக்கியிருந்தது.

முழு விவரங்களுக்கு

https://www.pothikai.news

ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு ரூ 8365 கோடி அளவுக்கான புதிய ஆயுத உதவியை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கான ஆயுதங்களை

ஆயுத சந்தையில் இருந்து உக்ரைனுக்கான ஆயுதங்களை வாங்குவதற்கு பைடன் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ள தொகையில் மீதமுள்ள 2.21 பில்லியன் டொலரில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுப்பு சரிபாதியாக உள்ளது

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 988 மில்லியன் டொலர் தொகையில் Lockheed Martin நிறுவனத்தில் இருந்தும் ஆயுதங்கள் வாங்க உள்ளனர். அத்துடன் ட்ரோன்கள் மற்றும் உதிரி பாகங்களும் இதில் உட்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆண்டுதோறும் முன்னெடுக்கும் ரீகன் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் நடந்த சந்திப்பின் போது உக்ரைனுக்கான இந்த ஆயுத உதவி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவாக ஜனாதிபதிக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவசர நிலையை கருத்தில்கொண்டு பைடன் நிர்வாகம் அமெரிக்க ஆயுத சேமிப்பில் இருந்து உக்ரைனுக்கான ஆயுதங்களை விடுவித்து வந்துள்ளது

62 பில்லியன் டொலர் நிதி

ஆனால், உக்ரைன் பாதுகாப்பு உதவி முயற்சி என ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து புதிய ஆயுதங்களை ஆயுத சந்தையில் இருந்து வாங்கவும் நடவடிக்கை எடுத்து வந்துள்ளது.

மட்டுமின்றி, 6 பில்லியன் டொலர் தொகை இன்னமும் ஜோ பைடன் நிர்வாகத்தால் உக்ரைனுக்கு செலவிட ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ல் ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்ததன் பின்னர் உக்ரைனுக்கு உதவும் பொருட்டு 62 பில்லியன் டொலர் நிதியை அமெரிக்கா ஒதுக்கியிருந்தது.

அதில் இருந்தே, தவணை முறையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி என வழங்கி வருகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரவிருப்பதால், இந்த உதவிகள் பெருமளவு குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம் என்றே அஞ்சப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *