மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு

img_2436-1.jpg

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால. கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்
முழு விவரங்களுக்கு

வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏழு சட்டவிரோத மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால. கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்

அவர்களை கைது செய்வதற்கு வசதியாக அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்த நபர்கள் குறித்த அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏழு நிகழ்வுகள்
அந்த ஏழு நிகழ்வுகளில் நான்கு நிகழ்வுகள் பருத்தித்துறை. பிரதேசத்திலும், இரண்டு கிளிநொச்சியிலும். ஒன்று யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

ஏற்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்கள் காணொளிப் பதிவுகள் மற்றும் தகவலறிந்தவர்கள் மூலம் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

நீதிமன்றங்களுக்கு அறிவிப்பு
பிடியாணையை பெறுவதற்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களிலும் காவல்துறையினர் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது

Social Media