டெல்லி TO அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் பயணம்

download-7-9.jpeg

டெல்லி TO அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் பயணம்

சாத்தியம் என்கிறார் எலான் மஸ்Shareஎலான் மஸ்கின் ஸ்டார்ஷிப் – டெல்லி TO அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் பயணம ஸ்டார்ஷிப் திட்டம் வெற்றி அடைந்தால், டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்vது சாத்தியம் என்கிறார் எலான் மஸ்க்.

உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் Tesla, SpaceX , Starlink, X(டிவிட்டர்) போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

பேட்டரி மூலம் இயங்கும் டெஸ்லா நிறுவன கார், டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும். ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் நேரடியாக செயற்கைகோள் மூலம் இணைய சேவை என எலான் மஸ்க்கின் சாதனைகள் நீள்கின்றன.

அவரது SpaceX நிறுவனம் நாசா, இஸ்ரோ போன்று விண்வெளிக்கு ராக்கெட், செயற்கைகோள்களை அனுப்பி ஆய்வுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தின் லோகோவை வடிவமைத்த டெஸ்லா பொறியாளர் அலெக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நியூயார்க்கில் இருந்து ராக்கெட் மூலம் பயணிப்போர், மணிக்கு 27 ஆயிரம் கி.மீ. வேகத்தில், 39 நிமிடங்களில் ஷாங்காய் நகரை சென்றடைகின்றனர்.

இதேபோன்று, ஒவ்வொரு நகரங்களுக்கு இடையே எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

டோக்கியோவிலிருந்து டெல்லிக்கு 30 நிமிடங்கள், டெல்லி-சான்பிரான்சிஸ்கோ 40 நிமிடங்கள், லண்டன்-நியூயார்க் 29 நிமிடங்கள், டோக்கியோ-டெல்லி 30 நிமிடங்கள் என பயண நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் உலகின் எந்த பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட முடியும்.

சில வருடங்களில் இந்த ஸ்டார்ஷிப் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கலாம் என அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவின் கீழ் ‘இது இப்போது சாத்தியம்’ என எலான் மஸ்க் கமெண்ட் செய்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *