நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு அறிவுறுத்தல்

70 இல்லங்களின் புனரமைப்பு பணிகள் 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும் இதுவரை 30 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

108 உத்தியோகபூர்வ இல்லங்களில் 70 இல்லங்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

10ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் டிசர்பர் மாதம் 3ஆம் திகதிக்கு பின்னர் முன்னெடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *