அணுகுண்டு வீசலாம் என்னும் பயமும் உருவாகிவருகிறது.
ரஷ்ய உக்ரைன் போர் மும்முரமடைந்துவரும் நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்னும் பயமும், கூடவே, புடின் அணுகுண்டு வீசலாம் என்னும் பயமும் உருவாகிவருகிறது.
Nottinghamshireil வாழும் மேத்யூ பிரைட் என்பவர், Bunker என்னும் பாதுகாப்புப் பேழைகளை உருவாக்குபவர் ஆவார்.
இந்நிலையில், அணுகுண்டு வீசப்பட்டால், அதிலிருந்து தப்புவதற்காக, பிரித்தானியர்கள் bunker வாங்க அலைமோதுவதாக தெரிவித்துள்ளார் மேத்யூ.கடந்த வாரத்தில் மட்டும், அணு ஆயுதங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, தங்களுக்கு இந்த பாதுகாப்புப் பேழைகளை கட்டிக்கொடுக்குமாறு எக்கச்சக்கமான பிரித்தானியர்கள் தன் நிறுவனத்தை அணுகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் மேத்யூ.
பூமிக்கடியில் பாதுகாப்பான முறையில் கட்டப்படும் இந்த பாதுகாப்புப் பேழைகளுக்காக 100,000 பவுண்டுகள் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
