பின்கதவால் மறுபடியும் சுமந்திரன்? அம்பலமாகும் சதி
ஏற்கனவே தமிழரசு கட்சியை யாழ்ப்பாணம் மண்ணிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் மறுபடியும் இந்த தவறை செய்ய வேண்டாம் இறுதியில் யாழ்ப்பாண மண்ணில் தமிழரசு கட்சி காணாமல் போய்விடும்
அரசியல் அவதானிகள் சமூக ஆர்வலர்கள் கண்டனம்
மாவை சேனாதிராஜா, சத்தியலிங்கம் போன்ற தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் இல்லாத, தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனம் இல்லாத நபர்களின் பெயர்களை தேசியப்பட்டியலுக்கு முன்மொழிந்து, இவர்களைவிட சுமந்திரனே மேல் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தும் சதிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இவை அனைத்தையும் விட, தமிழசுக் கட்சி தயாரித்த தேசியப் பட்டியல் பெயர்விபரக் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் அனுப்பவேயில்லை என்று தற்பொழுது தெரியவந்துள்ளது.
பட்டியலைத் தயாரித்து கடிதத் தலைப்பில், செயலாளர் சத்தியலிங்கம் கையொப்பம் இட்டு அந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டனவே தவிர, அந்தக் கடிதத்தை அவர் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கவேயில்லை.
