நேரம் வரும் என்று காத்துக் கொண்டிருந்த மக்கள் ஒருவரை கூட மிச்சம் விடாமல் ஒட்டுக் குழுக்களை ஒட்டுமொத்தமாக தூக்கி எறிந்த மக்கள்
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான், கருணா, சுமந்திரன் போன்ற ஒட்டுக் குழுவினரை ஒருத்தர் மிச்சமில்லாமல் மொத்தமாகச் சனம் தூக்கி எறிஞ்சதுதான் இந்தத் தேர்தலின் மிக முக்கியமான அம்சம் என அவதானிகள் கூறுகின்றனர்.
இனி இவர்களால் எழும்பவே முடியாது. இதை தேசக் கோட்பாட்டுக்கு எதிரான வரலாற்றுத் தடை நீக்கம் என்றும் துணிந்து சொல்லலாம்.
அதேசமயம் இது அநுர அலை இல்லை என்றும், தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்பியிராமல் தம்மைப் போராட்டத்திற்கு தயார் செய்கின்றது என்பதே இதன் உண்மை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
