எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளார்.இந்நிலையில் பல முகங்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னக்கோன் மற்றும் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, டீ.பி.ஹேரத், ஷாந்த பண்டார, அசங்க நவரத்ன ஆகியோரும் தோல்வி அடைந்துள்ளனர்.
சிரேஷ்ட அரசியல்வாதிகள்
முன்னாள் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன அனுராதபுரம் மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் போட்டியிடுவதை தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
